அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்

இருபதைந்து வருடங்களுக்கு முன் மதுரையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பெரும் புள்ளியின் வலது கரமாக பல கொலை சம்பவங்கள் செய்து வாழும் சிம்பு, தன் காதலி ஸ்ரேயாவுக்காக எல்லாவற்றையும் விட்டுத் திருந்தி, ஸ்ரேயாவின் விருப்பத்திற்காக துபாயில் செட்டிலாக திட்டமிடுகிறார்.
இந்நிலையில் தன், முதலாளியின் வற்புறுத்தலுக்காக, கடைசியாக ஒருத்தரை சம்பவம் செய்ய வந்த இடத்தில் அது மிஸ் ஆகி ஸ்ரேயாவின் அப்பா ஒய்ஜி மகேந்திரானை குத்தி விடுகிறார். அதன் பின் அவர் சம்பவம் செய்ய வந்தவரையும் தீர்த்து கட்டி விட்டு, ஒய்ஜி மகேந்திரனை, ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ஸ்ரேயாவுடன் துபாய் போகும் பிளானில் இருக்கும் போது துப்பாக்கிமுனையில் போலீஸ் அவரை ரவுண்ட் அப் செய்து சிறையில் தள்ளுகிறது.
எஸ்.டி.ஆர் சிம்பு சிறையில் இருந்து தப்பித்து ஸ்ரியாவுடன் சேர்ந்தாரா? துபாய் சென்றாரா? இதில் தமன்னாவுக்கு என்ன வேலை? இன்னொரு எஸ்டி ஆர் யார்..? என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு விடை சொல்ல முயன்றுள்ளார். முயற்சியில் பாதிக்கு மட்டுமே பதில் சொல்லி மீதிக்கு பதில் சொல்லாமல் ரசிகர்களை விட்டுவிட்டார்.
ஸ்ரேயா, தமன்னா இரு நாயகிகளில் ஸ்ரேயா, கிராமியலுக்கிலும் தமன்னா மார்டன் லுக்கிலும் எஸ்டிஆரை மட்டுமின்றி ரசிகர்களின் மனதையும் கவர்கின்றனர்.
அதிலும், "அங்கு உன்கிட்ட ரஜினிகாந்தைப் பார்த்தேன். காபி ஷாப்பில் ஒரு கமலை பார்த்தேன் மொத்தத்தில் ஒரு சிலம்பரசனைப் பார்த்தேன்" என தமன்னா சிம்புவைப் பார்த்து வாய் பிளப்பதும், "பொண்ணுங்களை பின்னாடி தட்டுற உங்களை மாதிரி பீப் பசங்களை லவ் பண்றதை விட இது மாதிரி தாத்தாவையே லவ் பண்ணலாம் டா..." அஸ்வின் தாத்தா சிம்புவை உசுப்பேத்துவதமாக நாயகியரால், தியேட்டரே ஒரே
ரணகளம் ஆகிறது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
