அன்னையர் தினத்தில் தாயின் ஆசிர்வாதம் பெற்ற செயல் தலைவர் !

உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது தாய் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அவருக்கு புது புடவையைப் பரிசாக வழங்கி, இனிப்பு ஊட்டி, அவருடன் செல்பி எடுத்த புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"அன்னையர் தினத்தையொட்டி கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தேன். இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி போற்றி மகிழ்ந்திடுவோம்!" என்று தெரிவித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
