Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அந்தமானில் புயல்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு!

On November 8, 2017
anthaman
Share
anthaman சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் அந்தமான் தீவு அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி பகுதி வரை, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை மைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.