அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள்!

இலங்கை அணிக்கு அதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 26) தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அபினவ் முகுந்த 12 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் புஜாரா இருவரும் மிக சிறப்பாக விளையாடினார்.
தவான் 190, புஜாரா 153 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். கோலி 3 ரன்கள் மட்டும் எடுத்தார். பின்னர் வந்த ரஹானே 57, அஸ்வின் 47, சஹா 16, ஜடேஜா 15 ரன்கள் எடுத்தனர்.
முன்னனி வீரர்கள் அவுட்டான பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 49 பந்தில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
முதல் ஆட்டத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தி அரைசதத்தை விளாசினார்
சமி 30 பந்தில் 3 சிக்ஸர்கள் விளாசி 30 ரன்கள் எடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 600 ரன்கள் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
