Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி..!

On April 19, 2019
edapadi244-27-1514382893
Share

தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று (ஏப்.18) நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு,முதல்வர் பழனிசாமி வாக்களிக்கும் பொருட்டு சொந்த ஊரான சேலத்திற்கு சென்றார்.

இன்று சென்னை திரும்பிய அவர், சேலம் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "நடைபெறவுள்ள நான்கு சட்டசபை தொகுதிஇடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஆட்சி தொடரவே மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இப்போது அமைத்துள்ள கூட்டணியே வருகிற தேர்தலிலும் தொடர வாய்ப்பு உள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில்தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.