Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிமுக அம்மா கட்சி பிரமுகர் ஓட்டுக்கு நோட்டு கொடுத்ததாள் கைது!..

On March 31, 2017
rupee
Share
rupee இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் மும்மரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்த கருணாமூர்த்தியை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 38வது வார்டில் உள்ளவர்களுக்கு தொப்பி அணிந்தவர்கள் சிலர் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் காட்சியின் வீடியோ ஆதாரத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் கருணாமூர்த்தியை கைது செய்துள்ளனர். அந்த வீடியோவில் உள்ள மேலும் இருவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.