அதிமுகவுடன் ரஜினி இணைய வாய்ப்பு உள்ளது-அமைச்சர் க.பாண்டியராஜன்..!

புதிதாக கட்சித் தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவுடன் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியை பற்றி கேட்ட கேள்விக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பதில் அளித்தார்.
அப்போது ரஜினி தொடர்பாக பேசிய அவர், “ ரஜினி எப்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறார். என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
வளர்ந்த கட்சியில் என்ன குளறுபடிகள் இருக்குமோ அதே குளறுபடிகள் இப்போதே அவரது அமைப்பில் இருக்கின்றன. சில பேரை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெளியே அனுப்புகிறார். ரஜினி இதுவரை கொள்கை நிலைப்பாடு குறித்து சொன்ன ஒரே ஒரு விஷயம் எம்ஜிஆர் ஆட்சி தருவோம் என்றுதான். எனவே அதிமுகவுடன் கூட்டணியாக இருக்கலாம். அல்லது ரஜினிகாந்த் எங்களுடனே வந்து சேரலாம்” என தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
