அதிகரித்து வரும் பெண்கள் பாலியல் வன்கொடுமை !

எனக்கு தெரிந்து கடந்த மாதங்கள் ஆகட்டும் வருடங்கள் ஆகட்டும் வாரங்கள் ஆகட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது போன்ற பாலியல் தொல்லைக்கு நம் சினிமா துறையில் உள்ள நடிகைகளும் ஆளாகின்றனர். இதில் தைரியமுள்ள சில நடிகைகள் மட்டும் முன்வந்து நங்கள் இவ்வாறு தான் திரைதுரைக்கு வரவழைக்க படுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் கேரளாவில் தாய் ஒருவர் அடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகளை முகைதீன் குட்டி என்ற தொழிலதிபர் ஒருவருக்கு விருந்தாக்கி உள்ளார்.
பின்னர் "தங்கல்" படத்தில் ஆமீர்கானுக்கு மகளாக நடித்த சைரா வாசிம். இவர் விமானத்தில் சென்ற போது சகபயணி ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுமி தனது அம்மா இறப்பிற்குப் பிறகு உறவினர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமிக்கு 8 வயது இருக்கும்பொழுது அவரது உறவினர் ஒருவர் தினமும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது பற்றி வெளியே தெரிய வந்தவுடன் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரைத் தேடி வந்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிறுமிக்கு நடந்த கொடுமையை நிரூபிப்பது போலீசாருக்கும் பெரும் சவாலாக இருந்தது. இது குறித்து சிறுமியிடம் போலீசார் விசாரித்தபோது அவருக்குச் சரிவர சொல்லத்தெரியாமல் குழம்பியுள்ளார். இந்நிலையில், அச்சிறுமிடம் நீதிமன்றம் நடந்த சம்பவம் பற்றி படம் வரைந்து காட்டும்படி கேட்டுக்கொண்டது. இதனையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்று பாதிக்கப்பட்ட சிறுமி படமாக வரைந்து காண்பித்துள்ளார்.
இந்த பாலியல் தொல்லைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனாலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறைந்தபாடில்லை.
ஆதலால் இது போன்ற கொடுமைகள் குறைய மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொண்டால் நன்று.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
