Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிகப் பொருட் செலவில் உருவாகியிருக்கும் "எவனும் புத்தனில்லை"..!

On October 29, 2018
2
Share

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை"

இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சுவாசிகா ,நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.

மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன்

ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் S.விஜயசேகரன். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது.  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடை பெற்றது.

   

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.