அதர்வாவுடன் முக்கிய வேடத்தில் நடிக்கும் "மேயாத மான்" கதாநாயகி !

அதர்வா, மேகா ஆகாஷ், உபன் படேல், ஆர்ஜே.பாலாஜி நடிக்கும் படம் தான் பூமராங். இப்படத்தை தயாரித்து இயக்குகிறார் ஆர்.கண்ணன்.
இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்:-
‘படத்தில் இடம்பெறும் வலுவான தேசப்பற்று கொண்ட ஒரு பாடல் காட்சிக்காக, ஆர்ட் டைரக்டர் ஷிவா யாதவ் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்தார். இசை அமைப்பாளர் ரதன், பாடலாசிரியர் விவேக், ஷிவா யாதவ், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோர் இணைந்து இந்தப் பாடலை சிறப்பாக உருவாக்கினார்கள்.
மேலும் இந்த படத்தில் இரண்டாயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், 100 நடனக் கலைஞர்கள் பங்கேற்றார்கள். அதுமட்டுமல்லாது "மேயாத மான்" இந்துஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்’ என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
