அடி தூள்: இனி பட்டா ஒரு வாரத்தில் உங்கள் கையில்.

காலம் முழுவதும் கஷ்டப்பட்டு காசு சேர்த்து இடம் வாங்கி போட்டிருப்பவர்களில் பலரும் அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக மாதக்கணக்கில் மெனக்கெடுகிறார்கள்.
இன்னும் சிலர் வருடங்களைக் கடந்தும் வாங்கிய இடத்திற்கு பட்டா வாங்க முடியாமல் நிலத்தையே பறிகொடுத்த அவல நிலைகள் எல்லாம் அரங்கேறி வருகிறது.
இனி பட்டா வாங்குவது ரொம்பவே ஈஸி.
இன்று முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஜூன் 15ம் தேதி முதல் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பொதுமக்களுக்கு பட்டா மாறுதல் குறித்த தகவல்கள் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யும் சொத்து விவரங்களின் அடிப்படையில் தான் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெற இருக்கிறது. இதனால், ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைத்து விடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய நடைமுறையின் படி, வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் இது குறித்த தகவல்கள் அனைத்துமே பதிவுத்துறையே வருவாய்த்துறைக்கு தெரிவித்து விடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய இன்று ஜூன் 15ம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுக்கு பின்பு ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யும் சொத்து விவரங்களின் அடிப்படையில் தான் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெற இருக்கிறது. இதனால், ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைத்து விடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய நடைமுறையின் படி, வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் இது குறித்த தகவல்கள் அனைத்துமே பதிவுத்துறையே வருவாய்த்துறைக்கு தெரிவித்து விடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய இன்று ஜூன் 15ம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுக்கு பின்பு ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.