Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித், விஷாலை தொடர்ந்து விஜய்க்கு வில்லனாகும் ஆக்ஷன் கிங் !

On May 17, 2018
arjun2-600
Share

விஜய் ஆண்டனியின் " அண்ணாதுரை" படம்  சரியாகப் போகாததினால் இவரது அடுத்த படமான "காளி"  படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதற்காக  படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படம் வருகிற 18-ஆம் தேதி வெளியாகிறது. "காளி" படம் தெலுங்கில் "காசி" என்ற பெயரில் வெளியாகிறது.

அங்கே படத்தின் ரிலீஸ் வேலைகளை கவனிக்க விஜய் ஆண்டனியின் மனைவியான பாத்திமா ஹைதராபாத் சென்று முகாமிட்டுள்ளார். அங்கிருந்தபடியே ஆந்திராவில் வெளியிட வேண்டிய தியேட்டர்களை முடிவு செய்கிறார்.இதற்கிடையில் தனது அடுத்த படங்களாக 'திமிரு பிடிச்சவன்', 'கொலைக்காரன்', 'திருடன்', மற்றும் 'மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படம் படங்களில் நடிக்கிறார்.

'திமிரு பிடிச்சவன்' படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இயக்குகிறார்.  'கொலைகாரன்' படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார் இப்படத்தில் நடிகர்  அர்ஜுனும் ஒரு முக்கிய ரோலில்  நடிக்கிறார். சமீபத்தில் வெளியான விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். அவர் நடித்த வில்லன் ரோல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அர்ஜுனுக்கு வில்லன் வேடத்தில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் தேடிவந்து கொண்டிருக்கிறது.

அவற்றில் விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' படத்தில் நடிக்க அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.