Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித், விஜய் படங்களுக்கு அவார்ட் கிடைப்பதில்லை! நக்கல் செய்தாரா தயாரிப்பாளர்?

On February 16, 2017
Al.Alagappan 2
Share
Al.Alagappan 2 புதுமுக இயக்குனர் பி.ஆர்.ரவி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர்க்கொடி'. இப்படத்தினை ஆன்லைன் வர்த்தகம் செய்யும் ஜே.பி.அமல்ராஜ் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு கன்னட பெண் அஞ்சனா நட்சத்திரா கதாநாயகியாக அதுவும் ஒரு கன்னட பெண்ணாகவே நடித்துள்ளார். படத்தின் இசையை விக்னேஷ் பாஸ்கரும், பின்னணி இசையை A.J.அளிமிர்ஸா அமைத்துள்ளார். ஒளிப்பதிவை கவிநாத் மேற்கொள்ள படத்தொகுப்பை சத்யநாராயணன் செய்துள்ளார். 'உயிர்க்கொடி' திரைப்படம் கர்நாடகத்தில் இருந்து வரும் காவேரி தண்ணீரையும், தமிழகத்திலிருந்து செல்லும் மின்சாரத்தையும் நாசுக்காக விவாதிக்கிறது. அத்தோடு தமிழக பையனும் ஒரு கன்னட பெண்மணிக்கும் ஏற்படும் காதலை பற்றி சொல்வதை போல் உள்ளது விழாவில் திரையிடப்பட்ட சில காட்சிகளும், பாடல்களும். இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறியதாவது, பெரிய படங்கள் அஜித், விஜய் ஆகியோரது படங்கள் அவார்ட் வாங்குவதில்லை. அப்படங்களுக்கு ஒரு பெரிய லாபம் என்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட லாபம் தான் வரும் என சொன்னார். தன்னுடைய மகன் இயக்கத்தில் தான் தயாரித்த 'சைவம் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததாகவும், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களில் ஆறு விருதுகளை 'சைவம்' திரைப்படம் வென்றது என குறிப்பிட்டார். தன்னுடைய மகன் இயக்கத்தில் தன்னுடைய தயாரிப்பில் வந்த 'சைவம்' வெற்றியை குறிப்பிட்டு அஜித், விஜய் படங்களை அவார்ட் வாங்க தகுதியற்றவை என நக்கலடித்தாரா என அவருக்கு தான் வெளிச்சம். ஆனால் அவர் குறிப்பிட்டதை போல் அஜித், விஜய் படங்கள் குறிப்பிடும்படி எந்த விருதும் பெறவில்லை என்பது உண்மை தான்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.