அஜித்தை ரசிகர்கள் இதயத்தில் வைத்திருக்கின்றனர் : நடிகர் விவேக்..!

தமிழ் சினிமாவின் டாப் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது அவர் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் நடிகர் அஜித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
‘பில்லா பாண்டி’ பட விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அஜித் எனக்கு 25 வருட நண்பர். அவரை எனக்கு வாலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவரை இப்படத்தின் ஹீரோ சுரேஷ் பனியனில் வைத்திருக்கலாம். ஆனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பனியனுள் இருக்கின்ற இதயத்தில் வைத்துள்ளனர்.
“அவர் அப்படி என்ன செய்துவிட்டார், ரசிகர்களுக்கு ஏன் அவர் மீது இவ்வளவு காதல் என்றால், எனக்கு தெரியும். அவரது தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி, விழ விழ எழுதல், எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அதையும் தாண்டி நின்று காட்டுவது ஆகியவை தான்” என்று விவேக் பாராட்டியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
