Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித்துடன் மீண்டும் ஒரு படம் பண்ணுவேன் - உறுதியுடன் இயக்குநர் வெங்கட் பிரபு..!

On February 18, 2019
Mangatha-2
Share

அஜித்துடன் மீண்டும் ஒரு படம் பண்ணுவேன் என உறுதியாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

கடந்த 2011ம் ஆண்டு அஜித்தை வைத்து மங்காத்தா எனும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் வெங்கட் பிரபு. ரிலீசாகி பல ஆண்டுகள் ஆனபோதும் இன்னமும் மக்களிடையே பேசும் படமாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, அஜித் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் வெங்கட் பிரபுவிடம் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிடம் மீண்டும் இதே கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், "மங்காத்தா 2விற்கு நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அதே வேளையில் பயமும் உள்ளது. நடிகர் அஜித்துடன் கூடிய சீக்கிரமே ஒரு படம் பண்ணும் ஆவலில் இருக்கிறேன். அது மங்காத்தா 2 வாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவருடன் மீண்டும் ஒரு படம் பண்ணுவேன்" என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.